2021 நவம்பர் 1 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் ஆகியோர் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர். முறையான தரவுகளின் பற்றாக்குறை: இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முறையான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அரசு வழங்கிய விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கருதியது. மேலும், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில அரசு இத்தகைய உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு உரிய அதிகாரம் உள்ளதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பா.ம.க உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, மாநில அரசு உரிய தரவுகளைச் சேகரித்து மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழக அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் தரவு சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது. 2022 ஏப்ரல் 7 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில், உரிய தரவுகளைச் சேகரித்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சமூக நீதி துரோகி திமுக! அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!
ஆனால், 10.5% இடஒதுக்கீடு உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10.5 % உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு துரோகம் இழைத்து விட்டு சமூக நீதிப் பற்றிய திமுக பேசலாமா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளிலும் மொத்தம் 38 வன்னிய எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறினார். இவர்கள் அனைவரையும் கட்சிகளைக் கடந்து வன்னிய இட ஒதுக்கீட்டை கேட்க வைக்க வேண்டும் என தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவருக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை இருக்கும்போது முதல்வரால் முடியாதா என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!