ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.
இதையும் படிங்க: இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா எடுத்த சமரச முயற்சிகளால், இந்திய, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் போனில் பேச்சு நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. டில்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனிடையே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவிய போது பெரும்பாலன மக்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். சிலர் போர் வேண்டாம் என கூறி வந்தனர். ஆனால் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிராக பேசியதோடு மட்டும் அல்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். மேலும் தங்களது வாட்ஸ் அப் எண்ணில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஸ்டேட்டஸும் வைத்துள்ளனர். இதுகுறித்த அறிந்த போலீசார் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போதும் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனவும் பாகிஸ்தான் வாழ்க எனவும் முழங்கி உள்ளனர். இதன் காரணமாக அவர்களை தங்களது பாணியில் 10 நிமிடம் நையப்புடைத்த போலீசர் தனியாக கவனித்துள்ளனர். போலீசார் அடி வெளுத்ததில் நொந்து போன அவர்களை அரை நிர்வாணமாக்கி போலீசார் ரோட்டில் ஊர்வலமாகவும் அழைத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!