12 ஆம் வகுப்பு தேர்வு கடந்த பிப். 15ம் தேதி தொடங்கி ஏப்.4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு இந்தியா மற்றும் 26 நாடுகளில் 7,842 தேர்வு மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் எழுந்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வரும் என கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெளியாகவில்லை. தற்போது அடுத்த வாரத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு மே.13ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் 12 அல்லது 13 ஆம் தேதி அன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் விஐடி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் வந்துவிட்டன. அது போல் அமிர்தா நுழைவு தேர்வின் முதல் கட்ட முடிவுகள், இரண்டாம் கட்ட தேர்வு தற்போது ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படுகிறது. மேலும் பல பல்கலைக்கழகத் தேர்வுகளும் தற்போது தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: இனி கம்மி மார்க் எடுத்தால் ஃபெயிலா? சிபிஎஸ்இ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!!

இந்த தேர்வுகளில் இடம் கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு இருக்கும் அடுத்தகட்ட வாய்ப்பு கட் ஆஃப் மதிப்பெண்கள். அதைகொண்டு கவுன்சலிங்கில் சேர வேண்டும் என்ற நிலையில் 12 தேர்வு முடிவுகள் வந்தால் தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முடிவு எடுக்க முடியும் என மாணவ மாணவியர்கள் தெரிவித்து வருகின்றனர்,. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளத்தில் பார்க்க வேண்டும்.

ஹோம்பேஜில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தேர்வு எண்ணையும் பிறந்த தேதியைும் கொண்டு லாகின் செய்தால் ரிசல்ட் டிஸ்பிளே ஆகும். பின்னர் இதை அப்படியே டிஜிலாக்கர் கொண்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். Digilockerல் போய் தேர்வு முடிவுகளை பார்க்க உரிய லாகின் தகவல்கள் ஏற்கெனவே பள்ளி நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அதை கொண்டு உள்ளே போய் டவுன்லோடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முகலாயர்கள் ‘அவுட்’... மகா கும்பமேளா ‘இன்’ - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்!