தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், குமரிக்கடலை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்தது.
குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறுகின்றது. வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருப்பள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, ராமநாதபுரம், நீலகிரியில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்!! அடிச்சி வெளுக்கப்போகுது... அலர்ட் மோடில் தமிழ்நாடு & புதுச்சேரி..!
இதனிடையே,கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெயர் கூடும் என்றும் குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறி உள்ளது.
இதையும் படிங்க: உஷாரா இருங்க மக்களே! கனமழை அப்டேட்.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?