வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

#BREAKING குலை நடுங்க வைக்கும் பயங்கரம்… கோவிலுக்குள் புகுந்து இருவர் வெட்டிக்கொலை …!

உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. தகவல் அறிந்து இறந்த இருவரது உறவினர்களும் கோவில் முன் திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் இந்து சமய அறநிலையத்த துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சாமி கோயிலில் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். 

இதில் மாடசாமி நேற்று பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாடசாமி கோவிலுக்கு வந்த போது பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது. 

இதையும் படிங்க: அதிரடி திருப்பம்… கை, கால்களைக் கட்டி 17 வயது சிறுவன் கொடூர கொலை… கைதானவர் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்..!

உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேர காவலாளிகள் பேச்சி முத்து மற்றும் சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். 

அருகே இருந்த உண்டியல் சேதமாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் மாடசாமி தகவல் கூறியுள்ளார். அவரது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.

உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. தகவல் அறிந்து இறந்த இருவரது உறவினர்களும் கோவில் முன் திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்கள் உடலை வாங்க மாட்டோம் என தற்போது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். 

கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “அச்சச்சோ…நெஞ்சே பதறுதே…” – 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை… ஷாக்கிங் காரணம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी