வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?… உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

ராசிபுரம் அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 2 வயது பேரனுடன் பாட்டி பலி - 4 பேர் படுகாயம். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு  சொந்த ஊருக்கு திரும்பியபோது விபத்து

ராசிபுரம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வயது பேரனுடன் பாட்டியும் பலியானதோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி நடேசன் (வயது 60). இவர் ஆடி மாத அமாவாசையையான நேற்று(12.8.26)     ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு, மனைவி அமுதா(52), மகன் பிரவீன் (32) உள்பட குடும்பத்தினர் 6 பேருடன் காரில் சென்றுள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சொந்த ஊருக்கு திரும்பியபோது, காரை நடேசனின் மகன் பிரவீன் ஓட்டி உள்ளார். இரவு 10 மணியளவில் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிப்பட்டி அருகே சென்றபோது,  எதிரே மரப்பாரம் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்… ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி…!

இதில் நடேசன், அவரது மனைவி அமுதா, மகன் பிரவீன், மருமகள் கோமதி(31), பேரன்கள் ஜீவித்(3),  நிக்சித்(2) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு, விபத்திற்கு உள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் நடேசனின் மனைவி அமுதா (52), பேரன் நிக்சித்(2) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த நடேசன், அவரது மகன் பிரவீன் உள்பட 4 பேருக்கு ராசிபுரம் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்… சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி… 7 பேரின் நிலை என்ன?

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी