கடந்த தேர்தல்களில் பாஜக அரசு வாக்கு திருட்டு மோசடியை நடத்தி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் துணை போயிருப்பதாகவும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். பீகார் தேர்தலை முன்னிட்டு முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிற 11 ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருவதாகவும் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமித் ஷா , நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதாக குற்றம் சாட்டு இருப்பதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார் .
ஆனால், நாடாளுமன்ற செயல்முறைகளை பார்க்கிற போது இக்குற்றச்சாட்டில் கடுகளவு கூட உண்மையில்லை. சமீபத்தில் பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுப் போயிருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து நாள்தோறும் போராட்டம் நடத்தினார்கள்., ஆனால், அதற்கு பா.ஜ.க. இசைவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதிர்கட்சிகள் இக்கோரிக்கையை மக்களவையில் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்ந நிலையிலும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் அவர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருப்பதாக தெரிவித்தார்
இதையும் படிங்க: விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

நாடாளுமன்ற ஜனநாயகத்தை வழிநடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாவார்கள். இந்த தேர்வை பாரபட்சமின்றி வெளிப்படைத்தன்மையோடு சட்டப்படி நடத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடத்தியிருப்பதை தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பகிரங்கமாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறினார். நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மின்னணு வடிவத்தில் கேட்டால் வழங்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியதாகவும் வரும் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நெல்லையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கும் வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!