வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஆந்திரா வெடிவிபத்து… பாதுகாப்பு குறைபாடுதான்… கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆந்திராவின் நிகழ்ந்த வெடி விபத்துக்கு முக்கிய காரணம் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது என்றும் இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது என்றும் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஆந்திரா அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணமாகிறது என விளக்கினார்.

இதையும் படிங்க: நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க… பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைப்பதாகவும், எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்… செல்வப் பெருந்தகை தாக்கு..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी