இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்தது, இதன்படி மாணவர்கள் தங்கள் பிராந்திய மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மற்றொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும்.
கர்நாடகாவில், தற்போது மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது, இதில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாவது மொழிகளாகவும், மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழி தேர்வு செய்யப்படுகிறது.
உருது, மராத்தி, தெலுங்கு, மற்றும் தமிழ் வழிப் பள்ளிகளில், முதல் மொழி அந்தந்த பயிற்று மொழியாகவும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக இந்தி அல்லது கன்னடமும் இருக்கிறது.
இதையும் படிங்க: பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??
ஆனால், இந்த மும்மொழிக் கொள்கை இந்தியை "திணிப்பதாக" உள்ளதாக கருதி, கர்நாடக காங்கிரஸ் அரசு இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. இந்த முயற்சி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதாக அமைந்துள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் மாநிலக் கல்விக் குழுவை உருவாக்கப்பட்ட வெளியிடப்பட்டது. அதில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாக விளங்கியது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை கன்னட மொழியில் கல்வியை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா-மணிலா இடையே நேரடி விமான சேவை.. பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு..!