இலங்கைத் தமிழர்களின் இந்தியாவிற்கு இடம்பெயர்வு முக்கியமாக 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1980களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில் தொடங்கியது. இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையிலான இன முரண்பாடுகள், 1958, 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்களால் மேலும் மோசமடைந்தன. தங்கள் உயிர்களை காக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அந்நாட்டு தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இலங்கைத் தமிழ அகதிகள் 100க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக திருச்சி, ஈரோடு, சேலம், மதுரை, மற்றும் கரூர் போன்ற இடங்களில் அமைந்துள்ளன. 1970களுக்கு முன் இந்தியாவிற்கு வந்தவர்கள் பலர் தமிழ்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து, உள்ளூர் சமூகத்தில் இணைந்து வாழ்ந்து விட்டனர்.

ஆனால், 1980களில் மற்றும் அதற்குப் பிறகு வந்தவர்கள் பெரும்பாலும் முகாம்களில் வசிக்கின்றனர். இந்திய அரசு அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி, அடிப்படை உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: கச்சத்தீவு தமிழர்கள் உரிமை! என்ன திமிரு இருக்கும்? இலங்கை அதிபரை சாடிய வேல்முருகன்
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டதின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
இதையும் படிங்க: கேள்விக்குறியாகும் கோரிக்கைகள்! கச்சத்தீவு எங்க பூமி... கறார் காட்டும் இலங்கைய அதிபர்