டெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாக காவிரி பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிகவும் பலவீனமாக இருந்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி மற்றும் ஹரங்கி ஆகியவற்றில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாகத் திறக்குமாறு தமிழ்நாடு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

காவிரி நதியின் மேல் பகுதியான கர்நாடகா இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தேவையான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்காததால் மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என்பது குறித்த கவலை அவர்களிடையே நிலவுகிறது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து இல்லாததால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு நீர் திறக்க முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா அதிகாரியில் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளனர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதையக்கு நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் தமிழக விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...