பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாகச் சென்ற எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கடக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.
அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: DMK ஜெயிக்கும்போது ஓட்டு மெஷின் சரியா இருந்துச்சா? தமிழிசை சரமாரி கேள்வி..!
இந்த நிலையில், தூத்துக்குடியில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் ஆணையம் குறித்த விஜயின் விமர்சனத்தை சாடினார். விஜய் வாயைத் திறந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சனை எத்தனையோ நாட்களாக போய்க் கொண்டிருப்பதாகவும், தூக்கத்தில் இருந்த விஜயை எழுப்பி விட்டார்கள் போல என்றும் கூறினார் அன்றாடம் பிரச்சினைகள் என்னவோ இருக்கிறது., அதையெல்லாம் விஜய் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்

ஒரு அரசியல் கட்சி தலைவராக இதெல்லாம் பார்க்க வேண்டும் என்றும் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம்., ஆனால் மக்கள் பிரச்சனையை பற்றி தினம் தினம் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
நெல்லையில் ஆணவ படுகொலை நடந்த போது விஜய் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். திருமாவளவன் உள்ளிட்டோர் கடந்த காலங்களில் நடந்த ஆணவ கொலைகளுக்கு அரசாங்கம் தான் காரணம் என்று கூறி வந்ததாகவும், தற்போது சாதிதான் காரணம் என்று கூறுவதாகவும் விமர்சித்தார்.
ஆணவ கொலைகள் நடந்தபோது விஜய் எங்குபோனார்., இதையெல்லாம் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் தினமும் போராடிட்டு வராங்களா? வீண்பழி சுமத்துராரு... முதல்வரை சாடிய தமிழிசை