முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, அணையின் நிலை, பராமரிப்பு, மற்றும் இதர விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. பராமரிப்பு பணி செய்ய மேற்பார்வை குழு பரிந்துரை உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. 2006, 2014 இறுதி தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததில் என்ன தப்பு கண்டுபிடிச்சிட்டீங்க.? ஜனாதிபதி, மத்திய அரசை வறுத்தெடுத்த கி.வீரமணி!!