தெலங்கானாவில் நைட்டி அணிந்து காரில் வந்த கொள்ளையர்கள் கேஸ் கட்டர் கொண்டு ஏ.டி.எம். இயந்திரம் கட் செய்து பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம்
காமரேட்டி மாவட்டம் காந்தாரி பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் நைட்டி அணிந்து வந்த கொள்ளையர்கள் நுழைந்து முதலில் ஏடிஎம் இயந்திரத்தின் மீது இருந்தே கேமிரா மீது கருப்பு நிற பெயிண்ட் ஸ்ப்ரே செய்தனர்.

பின்னர் கேஸ் கட்டர் கொண்டு இயந்திரத்தை உடைத்து அதிலுள்ள பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த பான்ஸ்வாடா டிஎஸ்பி வித்தல் ரெட்டி மற்றும் எஸ்.ஐ. மகேந்தர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெள்ளிக்கிழமை அன்று ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மர்ம மரணமா? நானா படேகர் இறப்பிற்கு இதுதான் காரணம்! வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை!
இருப்பினும் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தின் அளவு மற்றும் இருப்பு விவரங்களை வங்கி அதிகாரிகள் வெளியிடவில்லை. காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை அடிப்படையில் போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!