ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு டிரம்ப் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோர் பெயர்களை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பெயரை ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலைக்கு சூட்ட தெலங்கான அரசு முடிவு செய்து. டொனால்ட் டிரம்ப் அதை நியூ என்று அந்த சாலைக்கு பெயர் சூட்டப்படும் என தெலங்கானா அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாத போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு அமைக்கப்பட இருக்கும் RRR என்ற பசுமைவழிச் சாலைக்கு மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக தகவல் கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் தெலங்கானா அரசு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 19 நாடுகளின் குடிமக்களுக்கு நிரந்தரத் தடை... டிரம்ப் அறிவித்துள்ள மூன்றாம் உலக நாடுகள் எவை?
குறிப்பாக GOOGLE மற்றும் GOOGLE மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் GOOGLE ஸ்ட்ரீட் என்று ஒரு முக்கிய பகுதிக்கு பெயர் சூட்டப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயர்களையும் சாலைகளுக்கு வைப்போம் எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரத்தன் டாடா பெயர்களை சாலைகளுக்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது
இதையும் படிங்க: கண்கள் சிவந்த டிரம்ப்... இந்த நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை... உலக நாடுகள் அதிர்ச்சி...!