வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

தேனி சிறையில் பேரதிர்ச்சி… காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்… நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தில் சிறைக் கைதிகள் தப்பியோடியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறைச்சாலை இயங்கி வருகிறது. மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலை எனக் கூறப்படும் இந்தச் சிறையில், 500-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு, பிரதான நுழைவு வாயில் வழியாக 17 கைதிகள் கொண்ட கும்பல் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, தப்பியோடிய கைதிகள் பிற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடும் என்பதால், அவர்களைப் பிடிக்கத் தீவிர சோதனை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆபத்து… ஆபத்து…!! – இந்த பக்கம் வராதீங்க… முக்கிய மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு…!

அதேபோல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால், அவர்களைப் பிடித்து விசாரிக்கவும், அவர்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு வழிச்சாலை சந்திப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்களைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான தகவல்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: பொன்னி அரிசி வழங்குவதில் முறைகேடு..! எம்எல்ஏவிடம் வாக்குவாதம்..! கம்பத்தில் சலசலப்பு.!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी