பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் சமீர். இவர் ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களுக்கும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டித்துக்கும் இடையே இவர் இடைத்தரகராகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதாவது, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, அவர்களைப் பேச வைப்பது, அவர்களுக்குத் தேவையான பணத்தைச் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சமீர் பாலமாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு... 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு...!
ஏற்கெனவே, டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சமீரும் சோனிபட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டித் ஏற்கெனவே பொறுப்பேற்றிருந்தார். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே இந்தக் கும்பலைச் செயல்படுத்தி, டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படுகிறது.
அனில் பண்டித்துக்கும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது, திட்டங்களை வகுத்துக் கொடுப்பது, பணத்தைச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சமீர் மேற்கொண்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து காவல்துறையினர் முடிவு செய்வார்கள். அதன்பின்னர், டிரான்சிட் ரிமாண்ட் மூலம் அவரை மும்பைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு... நாம் தமிழர் கட்சி முக்கிய பிரமுகர் கைது... சீமானை சீண்டிய விஜய்...!