வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா ›

7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?… நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்… ஷாக்கில் பக்தர்கள்…!

ஆந்திராவில் 7-ம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய திருப்பதி கலப்பட லட்டு குறித்து கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடையே பெரும் பேரதிர்வை ஏற்படுத்தியது.

 இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு செய்து தீவிர விசாரணைக்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள், நெய் சப்ளை செய்த டெய்ரி நிறுவனத்தினர் என 30 க்கும் மேற்பட்டோர்   கைதும் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், திருப்பதி கலப்பட லட்டு பிரசாதம் குறித்து 10வது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. அதில் “திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்தது சகஜமானது.

இதையும் படிங்க: டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா… தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்…!

இது குறித்து முழு விசாரணை அவசியம் தேவை” என கேட்டு இதற்கு ஒரு வரியில் பதிலளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு பல மாணவர்கள் லட்டுவில் கலப்படம் நடந்ததாகவும், இது குறித்து முழு விசாரணை நடத்தி உண்மையை வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகத்தில் இந்த கேள்விதாளுடன் பல்வேறு சர்ச்சை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? – தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी