தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது.
கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கும்பத்தில், 3000 கிலோ தீப எண்ணெய் மற்றும் 500 கிலோ பிளவுச் சாம்பல் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதையும் படிங்க: சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...!
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைவர் டி.ஜி.பி. வெங்கட்ராமன் ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் தடுப்பது, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து சரக டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சியின் வாக்குறுதி என்னாச்சு? முதல்வருக்கு நயினார் சரமாரி கேள்வி...!