தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் 2024ம்ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்றங்கள் அதிகரித்துள்ளன.

2023ம் ஆண்டில் 3,407 போக்ஸோ வழக்குகள் பதிவாகியநிலையில், 2024ம் ஆண்டில் 5319 வழக்குகளாக அதிகரித்துள்ளன. பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தல் வழக்கு 2023ல் 403 வழக்காக இருந்தது, 2024ல் 471 வழக்காக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. 2 குழந்தைகளின் தந்தை வெறிச்செயல்..!
பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தல் வழக்கு 2023ல் 1650 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2024ல் 1885 வழக்காக அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 2023ல் 46 வழக்காக இருந்தது 2024ல் 96ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஆதாயத்துக்காக செய்யும்கொலை வழக்குகள் 2023ல் 83 ஆக இருந்தநிலையில் 2024ல் 75 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த கொலை வழக்குகள் 2023ல் 1598 வழக்குகளாக இருந்தநிலையில் 2024ல் 1488 எனக் குறைந்துள்ளது.

கொள்ளையடித்தல், திருட்டு வழக்குகள் 2023ல் 5253 வழக்குகளாக இருந்த நிலையில் 2024ல் 5385 ஆக அதிகரித்துள்ளது. திருட்டு வழக்குகள் 17788 வழக்குகளாக இருந்த நிலையில் 16019ஆகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் கூறுகையில் “இந்த புள்ளிவிவரங்களை சாதகமான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வுஅதிகரித்ததால்தான் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் வழங்கியதால் வழக்குகளும் அதிகரித்துள்ளன.

போக்ஸோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். பாஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அதிகமாக சமீபகாலமாக நடத்தி வருகிறோம்.
காவல்நிலையத்துக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போக்ஸோ சட்டத்தின்கீழ் புகார் அளிக்கும் சதவீதம் 2022ல் 88 சதவீதமாக இருந்தது, 2023ல் 84 சதவீதமாகவும், 2024ல் 77 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. 2021ல் இருந்து போக்ஸோ வழக்குள் பதிவு செய்வது குறைந்துவந்தநிலையில் 2024ல் 52 சதவீதத்துக்கும்மேல் அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் காரில் பலாத்கார முயற்சி இளம்பெண் பலி, தங்கை படுகாயம்.. 30 நிமிட மரண போராட்டம்..!