இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடந்த ரெண்டு டெகேடுல இல்லாத அளவுக்கு செம மோசமான நிலைமைக்கு போயிருக்குனு அமெரிக்காவோட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் சொல்லியிருக்காரு.
இங்கிலாந்து செய்தி நிறுவனமான LBC-க்கு கொடுத்த பேட்டியில, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு காலத்துல இருந்த செம க்ளோஸ் நட்பு இப்போ மொத்தமா முறிஞ்சு போச்சுனு சொல்லியிருக்காரு. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போரும், புவிசார் அரசியல் பதற்றங்களும் செம்ம ஜோரா இருக்குற இந்த நேரத்துல இந்த கருத்து பரபரப்பை கிளப்பியிருக்கு.
“டிரம்புக்கும் மோடிக்கும் பர்சனலா செம நட்பு இருந்துச்சு. ஆனா இப்போ அது முடிஞ்சு போச்சுனு நினைக்குறேன். இது எல்லாருக்கும் ஒரு பாடம்,”னு பால்டன் சொல்லியிருக்காரு. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மாதிரி உலகத் தலைவர்கள் இதையெல்லாம் கவனிச்சுக்கணும்னு எச்சரிச்சிருக்காரு. டிரம்போட பர்சனல் நட்பு சில சமயம் உதவலாம், ஆனா அவரோட “மோசமான முடிவுகள”ல இருந்து உங்களை காப்பாத்தாதுனு சொல்லியிருக்காரு.
இதையும் படிங்க: இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது!! நீலி கண்ணீர் வடிக்கும் ட்ரம்ப்!! வரி விதிப்புக்கு சப்பைக்கட்டு!
டிரம்பு சர்வதேச உறவுகளை தலைவர்களோட பர்சனல் நட்பு மூலமாதான் பாக்குறாருனு பால்டன் குறிப்பிட்டாரு. “உதாரணமா, புடினோட நல்ல உறவு இருந்தா, அமெரிக்காவுக்கு ரஷ்யாவோட நல்ல உறவு இருக்குனு டிரம்பு நினைக்குறாரு. ஆனா அது உண்மையில்லை,”னு அவரு சொன்னாரு.
2019-ல ஹூஸ்டன்ல நடந்த “ஹவுடி மோடி” பேரணி முதல் பல அரசு விசிட் வரைக்கும் மோடி-டிரம்ப் நட்பு உலக அளவுல ஹெட்லைன்ஸ் ஆனது. ஆனா, இப்போ அந்த உறவு மொத்தமா மோசமாகி, இந்தியா-அமெரிக்க உறவு செம கீழ்நிலைக்கு போயிருக்கு. டிரம்பு அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிச்சிருக்கு, மேலும் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குறதால இன்னொரு 25% கூடுதல் வரி போட்டிருக்கு.

இதனால இந்தியா ரஷ்யாவையும் சீனாவையும் நெருங்குற மாதிரி ஆகியிருக்குனு பால்டன் எச்சரிக்குறாரு. “டிரம்போட வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவை குளிர்போர் கால ரஷ்ய உறவுகளை நோக்கி திரும்பவும், சீனாவை பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலா கருதுறதை மறக்கவும் வெச்சிருக்கு,”னு அவரு குற்றம்சாட்டியிருக்காரு.
சமீபத்துல சீனாவுல நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டுல மோடி, புடின், ஜி ஜின்பிங்கோட இணைஞ்சு காணப்பட்டது இந்தியாவோட மாறிவர்ற முன்னுரிமைகளை காட்டுதுனு பால்டன் சொல்றாரு. இந்திய வெளியுறவுத் துறை, அமெரிக்காவோட வரி விதிப்பு “ரொம்ப துரதிஷ்டவசமானது”னு விமர்சிச்சிருக்கு. மேலும், டிரம்போட ஆலோசகர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவை “புடினோட போரை ஆதரிக்குற நாடு”னு சொன்னது பதற்றத்தை இன்னும் கூட்டியிருக்கு.
பால்டன் 2018-2019-ல டிரம்போட தேசிய பாதுகாப்பு ஆலோசகரா இருந்தவர். இப்போ டிரம்போட வெளியுறவுக் கொள்கைகளை கடுமையா விமர்சிச்சு வர்றாரு. கடந்த ஆகஸ்ட்டுல அவரோட வீடும் ஆபீஸும் FBI-யால சோதனையிடப்பட்டது, இது டிரம்பு நியமிச்ச FBI இயக்குநர் காஷ் படேலோட உத்தரவுல நடந்ததுனு சொல்றாங்க. இந்தியா-அமெரிக்க உறவுல வந்திருக்குற இந்த மோசமான நிலை உலக அரசியல், வர்த்தகத்துல புது சவால்களை எழுப்பியிருக்கு.
இதையும் படிங்க: இத்தன நாள் முட்டாள்தனமா இருந்துட்டோம்! இனி அப்படியில்லை!! 50% வரி வாபஸ் கிடையாது! ட்ரம்ப் அடாவடி!