அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்திய பொருளாதாரம் இறந்து போச்சு”னு உளறியது, உலக தொழில்துறையினர் மத்தியில பெரிய அதிர்ச்சியை கிளப்பியிருக்கு. ஆனா, உலக வங்கி, IMF மாதிரியான சர்வதேச அமைப்புகள், “இந்திய பொருளாதாரம் உலகத்துலயே வேகமா வளர்ந்து ஒளிருது”னு பாராட்டி வருது. இப்படி ஒரு நிலையில, டிரம்போட “இறந்த பொருளாதாரம்” கமென்ட், அவரோட நிறுவனமே இந்தியாவுல பண்ணுற பிசினஸ் மூலமா மூக்கறுக்கப்பட்டிருக்கு!
டிரம்ப் நிறுவனம் இந்திய கட்டுமானத் துறையில 2011-ல கால் பதிச்சு, இப்போ அசுர வளர்ச்சி காட்டுது. கடந்த வருஷம் வரை இவங்க இந்தியாவுல 175 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தாங்க. ஆனா, 2024 நவம்பர் 5-க்கு பிறகு, டிரம்ப் அதிபரான பிறகு, இவங்க த்ரிபேகா கட்டுமான நிறுவனத்தோட கைகோர்த்து, குர்கான்ல 6 புது திட்டங்களை கைப்பற்றி, 8 மில்லியன் சதுர அடி கட்டடங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்காங்க.
இது, 15,000 கோடி ரூபாய் வருமான வாய்ப்பை உருவாக்கியிருக்கு. கடந்த வருஷம் வரை 3 மில்லியன் சதுர அடி கட்டியிருந்த இவங்க, இப்போ ஒரே வருஷத்துல 11 மில்லியன் சதுர அடியா மும்மடங்கு வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. இறந்த பொருளாதாரத்துல இது எப்படி சாத்தியம்னு டிரம்பை கேட்கணும்!
இதையும் படிங்க: சீனாவுக்கு போகாதீங்க!! 7 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்.. அமெரிக்கா வார்னிங்..!

இந்தியாவுல டிரம்ப் நிறுவனத்தோட திட்டங்களை பார்த்தா, புனேல 300 கோடி ரூபாய் மதிப்புல 23 மாடி டிரம்ப் டவர், மும்பையில 3,000 கோடி ரூபாய் மதிப்புல 76 மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கு. கொல்கத்தாவில 400 கோடி ரூபாய் மதிப்புல 4 லட்சம் சதுர அடி, குர்கான்ல 1,900 கோடி ரூபாய் மதிப்புல 12 லட்சம் சதுர அடி கட்டுமானங்கள் இந்த வருஷ இறுதிக்குள்ள முடியப் போகுது. இந்த அசுர வளர்ச்சிக்கு, இந்தியாவோட பொருளாதார நிலைத்தன்மையும், கட்டுமானத் துறையோட உறுதியான வளர்ச்சியும் காரணம்னு தொழில்துறை வல்லுநர்கள் சொல்றாங்க.
ஆனா, டிரம்ப் நிறுவனத்துக்கு இந்தியாவுல சில சிக்கல்களும் இருக்கு. 2023-ல இவங்க கூட்டாளி நிறுவனங்கள், ஹரியானாவுல நீதித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்துல சிக்கினது.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில இருக்கு. 2011-ல மும்பையில சவ்பட்டி பகுதியில 40-60 மாடி கட்டடம் கட்ட ரோஹன் லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தோட ஒப்பந்தம் செஞ்சப்போ, விதிமீறல் காரணமா மஹாராஷ்டிரா அரசு அனுமதியை ரத்து பண்ணிடுச்சு. இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் நிறுவனம் இந்தியாவுல தொடர்ந்து வளர்ந்து வருது.
இந்திய பொருளாதாரம் 2024-25-ல 6.4% வளர்ச்சி அடையும்னு IMF கணிச்சிருக்கு. உலகத்துல வேகமா வளர்ற பொருளாதாரங்கள்ல இந்தியா முன்னணியில இருக்கு. டிரம்ப் “இறந்த பொருளாதாரம்”னு சொன்னது, அவரோட வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த இந்தியாவை மிரட்டற ஒரு உத்தியா பார்க்கப்படுது.
ஆனா, இந்தியாவோட வளர்ச்சியும், டிரம்ப் நிறுவனத்தோட பிசினஸ் வெற்றியும், இந்த குற்றச்சாட்டை அப்பட்டமா பொய்யாக்குது. இந்திய பொருளாதாரம் ஒளிருது, டிரம்போட மூக்கு மட்டுமே அறுக்கப்பட்டிருக்கு!
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டும் பாக்.? சீனா வயிற்றில் புளி!! சர்வதேச அரசியலில் திடீர் மாற்றம்!!