வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

விஜய் அரசின் Women Power! அமைச்சரவையில் 4 பெண்கள்… எந்தெந்த துறைகள்..?

தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசை அமைத்தது. மே 10, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இந்த அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சராக செல்வி எஸ். கீர்த்தனா இடம்பெற்று இருந்தார்.

சிவகாசி தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 வயது இளம் தலைவி செல்வி கீர்த்தனா, தவெக அமைச்சரவையின் ஒரே பெண் உறுப்பினராகவும் இருந்தார். தொடர்ந்து தொழில் துறை இவருக்கு ஒதுக்கப்பட்டது. முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.

இதையும் படிங்க: #BREAKING தமிழக அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 23 பேர் யார்?… வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்…!

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளாக உயர்கல்வி, வேளாண்மை, வருவாய், போக்குவரத்து, சமூக நலன் உள்ளிட்டவை அமைச்சர்கள் இல்லாமல் இருந்த நிலையில் இந்த விரிவாக்கம் அவசியமானதாக மாறியது. இன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் 3 பெண் MLA-கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ராஜபாளையம் தொகுதி MLA ஜெகதீஸ்வரி, அவினாசி தொகுதி MLA கமலி, குமாரபாளையம் தொகுதி MLA விஜயலக்ஷ்மி ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர் பதவியேற்ற நிலையில், தவெக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்… அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?… உத்தேச பட்டியல் இதோ…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी