தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர்கள் சக்தி மற்றும் மக்களின் சக்தி நம்முடன் இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய், தளபதி விஜய், விஜய் தளபதி என சொந்தம் கொண்டாடும் வெகுஜன மக்கள் படை நம்மோடு இருப்பதாக தெரிவித்தார். மாபெரும் மக்கள் சக்தி இருக்கும்போது அடிமை கூட்டணியோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ்-க்கும், மதவாத சக்திகளுக்கும் ஆதரவு தரும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்தார். 2026 தேர்தல் TVK, DMK ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலானது தான் என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் சமபங்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: என்னோட அண்ணன் கேப்டன் விஜயகாந்த்.. மண் அதிர விண்ணதிர விஜய் மாஸ் ஸ்பீச்..!
எதிர்காலம் வரும், இந்த கூட்டத்தின் ஆட்டத்தை அழிப்பேன் என பாட்டு பாடி பேசினார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.
இதையும் படிங்க: தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...