கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

அப்போது, காவல்துறை தான் விஜயை கரூரில் இருந்து செல்லுமாறு கூறியதாகவும், விஜய்யை வெளியேற்றியது போலீஸ்தான் என்றும் தெரிவித்தனர் விஜய் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லவில்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவதூறு கருத்துகளை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும் விஜய் அந்த பகுதியில் இருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் கூறிதாகவும் தெரிவித்துள்ளனர். கரூர் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து விஜய் தப்பி சென்றதாக அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் பாதங்களை முன் வைத்தனர்.
இதையும் படிங்க: கரூர் மக்களுக்கு விஜய் மேல எந்த கோபமும் இல்ல.. அத அவங்களே சொல்லிட்டாங்க..!! அருண்ராஜ் தகவல்..!
விஜய் தப்பிச் சென்றதாக கூறுவது முற்றிலும் தவறு என்றும் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறினர். தேர்தல் பரப்புரை வழிகாட்டு நெறிமுறை வழக்கு, கிரிமினல் வழக்காக பதியப்பட்டது ஏன் என்றும் வழக்கு நிலவியல் உள்ள போது மற்ற மனுக்களில் எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையும் படிங்க: கரூர் துயரத்திற்கு நீதி கிடைக்காது... சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு...!