தஞ்சாவூரைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விஜய் மேற்கொண்டு வரும் மாநில விரிவான பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே இது அமைகிறது.
தவெகவின் தொடக்கக் காலத்திலிருந்தே விஜய் தனது அரசியல் பயணத்தை வார இறுதி நாட்களில் மட்டுமே மேற்கொள்ளும் முடிவை எடுத்திருந்தார். இதன்படி, செப்டம்பர் 2025-ல் திருச்சியில் இருந்து தொடங்கிய அவரது மாநில விரிவான சுற்றுப்பயணம், பல மாவட்டங்களை உள்ளடக்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கரூர் சம்பவத்தால் விஜயின் பிரச்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இடைத்தொடர்ந்து நிலைமை சற்று சரியானதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி பெற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாகிய அவற்றை நடத்தி வருகிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திமுக அரசை விஜய் கடுமையாக சாடி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை நேரடியாகவே முன்வைத்து வருகிறார் விஜய். இந்த நிலையில், தஞ்சாவூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் - தவெக கூட்டணி... தற்கொலைக்கு சமம்..! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆதங்கம்..!!
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் திருநெல்வேலி மாவட்டத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவார் என்று கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விசையின் மக்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டைக் கொலை..! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? கொந்தளித்த விஜய்..!!