ஜக்தல்பூரை சேர்ந்த ஒருவர் இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவருடைய மனைவி இறந்ததை தொடர்ந்து 376 ( கற்பழிப்பு), 377 (இயற்கைக்குமான மாறான பாலுறவு) மற்றும் 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) ஆகியவற்றின் கீழ் அந்த நபர் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்து தற்போது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள், "மனைவியின் வயது 15 க்கு குறைவாக இல்லாவிட்டால் கணவர் தனது மனைவியுடன் செய்யும் எந்த ஒரு பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயலையும் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. ஏனெனில் இறக்கைக்கு மாறான செயலுக்கு மனைவியின் ஒப்புதல் இல்லாதது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது"என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசு தரப்பு கூற்றுப்படி பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூரில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மாஜிஸ்திரேட் இடம் தனது மனைவி கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அதே நாளில் மருத்துவமனையில் மனைவி இறந்து விட்டார். நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்ட அவருடைய மரண வாக்குமூலத்தில் தனது கணவரின் கட்டாய பாலியல் உறவு காரணமாக, தான் நோய் வாய்ப்பட்டதாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு மேலும் கொடுமை.. வெறும் ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்..
ஜக்தல்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி (விரைவு நீதிமன்றம்) இந்திய தண்டனை சட்ட பிரிவு 377, 376 மற்றும் 34 இன் கீழ் அவரை குற்றவாளி என்று கண்டறிந்து அவருக்கு 10 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிலாஸ்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்றும் பிரதிவாதி தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் அந்தப் பெண் தனது முதல் பிரசவத்திற்கு பிறகு மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் ரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் சாட்சியமளித்த இரண்டு சாட்சிகளின் அறிக்கைகளை விசாரணை நீதிமன்றம் புறக்கணித்து விட்டதாகவும் அவருடைய தரப்பு வக்கீல் வாதிட்டார். மரண அறிவிப்பின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இருப்பினும் மாநில அரசு தரப்பில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,

தீர்ப்பின் முழு விவரம்: "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 375, 376 மற்றும் 377 பரிசீலித்ததில் பிரிவு 375 -இன் திருத்தப்பட்ட வரையறையின் அடிப்படையில் கணவன் மனைவி இடையே குற்றம் நடக்காது என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் அத்தகைய பாலியல் பலாத்காரத்தை கண்டுபிடிக்கவும் முடியாது. பிரிவு 375-ல் 2013 ஆம் ஆண்டில் திருத்தம் விதிவிலக்கு 2-ஐ அறிமுகம் செய்தது. இது ஒரு மனிதன் தனது மனைவியுடன் பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயல்கள் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்பதை தெளிவு படுத்துகிறது.
எனவே ஒரு கணவர் தனது வயதுக்கு வந்த மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டால்,அது 377 வது பிரிவின் கீழ் பலாத்காரமாக கருதப்பட முடியாது. உடல் ரீதியான உறவில் ஈடுபடும் உடல் பாகங்களை நன்கு வரையறுக்கப்பட்டு பிரிவு 375 உடன் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தாலும் பிரிவு 377 இயற்கை மாறான உறவு குற்றவாளியை வெளிப்படையாக வரையறுக்கவில்லை. நவஜோத் சிங் ஜோகர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

மொத்தத்தில் சட்ட விதிகளின்படி கணவன் மனைவி இடையே சம்மதம் தேவையில்லை என்பதும் இதை இயற்கைக்கு மாறான குற்றமாக கருத முடியாது என்பதையும் தெளிவாக கூறுகிறது. எனவே மனைவியின் வயது 15 வயதுக்கு குறைவாக இல்லாவிட்டால் தனது மனைவியுடன் செய்யும் எந்த ஒரு பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயலையும் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்பதும் தெளிவாகிறது.
எனவே விசாரணை நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 34 இந்த வழக்கில் தண்டனை விதித்து இருப்பது விபரீதமானது என்று தான் கருதுகிறோம். இது போன்ற உண்மைகளை பரிசீலிக்காமல் தண்டனை வழங்கி இருப்பதற்கான எந்த ஒரு காரணமும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை". இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவரை விடுவித்து உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இது உழைத்து சம்பாதித்த பணம்... திரள் நிதி திரட்டி வாழும் உனக்கு ஏன் இவ்வளவு 'கொழுப்பு'- சீமானை வெளுத்து வாங்கிய தவெக..!