2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்ற மாணவி இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்ற மாணவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்.இதேபோல், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய 2 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Ex.அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி..! தமிழக அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் செம்ம குஷி.. சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!