டெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ டெல்லி வந்தடைந்தார். குவாட் மாநாட்டுக்கு முன்னதாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலில் கோல்கத்தா சென்ற மார்கோ ரூபியோ, அங்குள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி தலைமையகத்தையும், அந்த அமைப்புடன் தொடர்புடைய குழந்தைகள் இல்லத்தையும் பார்வையிட்டார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோல்கத்தா சென்றது இதுவே முதல் முறையாகும்.
தனது மனைவி ஜெனெட் ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் டெல்லி வந்த ரூபியோ, பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் இந்தோ-பசிபிக் உத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். மே 26-ம் தேதி நடைபெறவுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு முன்னதாக இந்த சுற்றுப்பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியா-அமெரிக்க உறவுகள் தற்போது வலுவான கட்டத்தில் உள்ள நிலையில், மார்கோ ரூபியோவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் உத்திகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!