அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது.
நாளை புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துது. அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விஜய் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பிரத்தியேக வாகனம் வெளியே எடுத்து வரப்படவில்லை. விஜயின் பிரச்சாரமும் கரூர் சம்பவத்தோடும் முடங்கிப் போனது. தமிழக வெற்றி கழகம் சார்பில் நிதி உதவிகள் கொடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் விஜய் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் தேவையான உதவிகள் அனைத்தையும் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த இருப்பதாக கூறப்பட்டது. விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நாளை விஜய் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி உரையாற்ற இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் பிரத்தியேக பிரச்சார வாகனமானது புதுச்சேரிக்கு புறப்பட்டது. இதனால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக தலைமையில் 3வது கூட்டணி... NDA- வுக்கு பின்னடைவு... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி...!