நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்திய வரலாற்று அரசியல் நாடகமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார், அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் மிகப்பெரிய சிக்கல் தணிக்கை வாரியத்தில் ஏற்பட்டது. நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு தணிக்கை சான்று கிடைத்த நிலையில் பராசக்தி திரைப்படம் வெளியாகியது. பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்த நிலையில் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்கவில்லை.

விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காத விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருப்பதாகவும் பிரதமர் மோடியின் தலையீடு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர். அது மட்டுமல்லாது ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கொடுக்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜனநாயகன் தணிக்கைச் சான்று விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் சுட்டிப்பையன்… கொட்டும் மழையில் மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய ராகுல் காந்தி…!
இதனிடையே, ஜனநாயகன் படத்தை தள்ளிப் போடுவது திரைத்துறை மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். ஜனநாயகனை போல் மெர்சல் படத்திற்கும் பாஜக கட்டுப்பாடுகளை விதித்ததற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பராசக்தி படத்தில் சில கருத்துக்கள் முரண்பாடாகவே உள்ளது என்றும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் ஆலோசிக்க இருப்பதாகவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!