தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர்.
இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டும் தமிழக வெற்றி கழகம் மீண்டும் கட்சி பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தீவிரமாக அரசியல் களமாடும் நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரி செல்கிறார். கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார். புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விஜய் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உப்பளம் சோணாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு விஜய் உரையாற்ற உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தவெக சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப் போகுது... இனி விஜய் தான் எல்லாம்... மார்த்தட்டும் செங்கோட்டையன்...!
இந்த நிலையில் நாளை புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. அது மட்டுமல்லாது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விஜய் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி... தவெக தலையில் இறங்கியது இடி... காவலர் கையைக் கடித்துக் குதறியவருக்கு நேர்ந்த கதி...!