இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய குவாட் (Quadrilateral Security Dialogue) அமைப்போட அடுத்த உச்சி மாநாடு செப்டம்பர் 2025-ல டில்லியில நடக்கப் போகுது. ஆனா, இந்த மாநாடு நடக்குமான்னு இப்போ பெரிய சந்தேகம் எழுந்திருக்கு. காரணம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவோட ரஷ்ய எண்ணெய் வாங்குதலை எதிர்த்து, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிச்சு உறவுல பெரிய புயலை கிளப்பியிருக்கார்.
முதலில் 25% வரி அறிவிச்சவர், இப்போ மறுபடியும் 25% கூடுதல் வரி போட்டு, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியிருக்கார். இதுக்கு இந்தியா கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, “இது நியாயமில்லை, பைடன் நிர்வாகமே ரஷ்ய எண்ணெய் வாங்க சொன்னது”ன்னு விளக்கமும் கொடுத்திருக்கு. இந்த சூழல்ல, பிரதமர் மோடி சீனாவுக்கு முதல் முறையா போக தயாராகுறது, கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியாவோட பக்கத்துல பெரிய கவனத்தை ஈர்த்திருக்கு.
குவாட் அமைப்பு, இந்தோ-பசிபிக் பகுதியில சீனாவோட ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. ஆனா, ட்ரம்போட இந்த வரி அடாவடி, இந்த மாநாடு நடக்குமான்னு கேள்வி எழுப்பியிருக்கு. செப்டம்பர்ல நடக்கும்னு சொன்னாலும், இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படல. ஆஸ்திரேலிய அதிகாரிகள், “இந்தியா-அமெரிக்கா கருத்து வேறுபாடு காரணமா, குவாட் மாநாடு நடக்காம போகலாம்.
இதையும் படிங்க: ஜெட் ஸ்பீடில் ஏறப்போகும் கச்சா எண்ணெய் விலை!! தாறுமாறாக உயரப்போகும் விலைவாசி!!
மோடி, ட்ரம்பை சொந்த மண்ணுல வரவேற்க தயங்கலாம்”னு சொல்றாங்க. ஆஸ்திரேலியாவோட பிராந்திய கொள்கை மைய மூத்த அதிகாரி ராஜி பிள்ளை ராஜகோபாலன், “குவாட் மாநாடு நடக்கலைன்னா, அது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதில்லை. இது சீனாவோட ஆதிக்கத்தை வலுப்படுத்தும். குவாட் கூட்டணியை மீட்டெடுக்க முயற்சி செய்யணும், இல்லைன்னா சீனாவோட பிரச்சனைகள் முடிவுக்கு வராது”ன்னு எச்சரிச்சிருக்கார்.

ட்ரம்போட இந்த வரி, இந்தியாவோட 86.5 பில்லியன் டாலர் அமெரிக்க ஏற்றுமதியை 40-50% குறைக்கலாம்னு பொருளாதார நிபுணர்கள் சொல்றாங்க. இது குவாட் அமைப்போட எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குது. ட்ரம்ப் இந்த மாநாட்டுக்கு வருவாரான்னு கூட உறுதியில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம், “இந்த வரி நியாயமில்லை, எங்களோட தேசிய நலன்களை பாதுகாக்க எல்லா வழியையும் பயன்படுத்துவோம்”னு சொல்லியிருக்கு.
மோடி, பிரேசில் அதிபர் லுலாவோட பேசி, பிரிக்ஸ் கூட்டணியை வலுப்படுத்துறதுல கவனம் செலுத்துறார். அதே நேரத்துல, சீனாவுக்கு மோடியோட வருகை, இந்தியா-சீனா உறவுல ஒரு புது தொடக்கத்தை உருவாக்கலாம்னு பேசப்படுது.
இந்த சூழல், 2023-ல இந்தியாவுல நடந்த ஜி20 மாநாட்டோட சவால்களை நினைவுபடுத்துது, அப்போ கூட உக்ரைன் விவகாரத்துல கருத்து வேறுபாடு இருந்துச்சு. இப்போ குவாட் மாநாடு இதே மாதிரி ஒரு சிக்கலுக்கு உள்ளாகலாம்னு பயம் இருக்கு. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்யலாம், ஆனா ட்ரம்போட “அமெரிக்கா முதல” கொள்கை, இந்த கூட்டணியை பலவீனப்படுத்தலாம்னு அஞ்சப்படுது.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்காவின் 20 ஆண்டு கால உறவு பாதிக்கப்படும்!! ட்ரம்புக்கு உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு!!