டெல்லியில பிதாம்புரா மெட்ரோ நிலையம் பக்கத்துல இருக்குற ‘தூபதா’ உணவகத்துல ஒரு தம்பதி இந்திய உடையணிஞ்சதால உள்ள விடாம தடுக்கப்பட்ட சம்பவம் பெரிய புயலை கிளப்பியிருக்கு. ஆகஸ்ட் 3, 2025-ல நடந்த இந்த சம்பவத்தோட வீடியோ சோஷியல் மீடியாவுல வைரலாக, மக்கள் கடுமையா கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. இதையடுத்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தா விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காங்க, உணவக முதலாளியும் மன்னிப்பு கேட்டிருக்காரு.
வீடியோவுல, ஒரு பெண் சுடிதார்-சால்வையும், அவரோட கணவர் டி-சர்ட், பேன்ட்டும் அணிஞ்சு உணவகத்துக்கு வந்திருக்காங்க. ஆனா, உணவக மேலாளர் அஜய் ராணா, “இந்திய உடை உள்ள அனுமதிக்கப்படாது”ன்னு சொல்லி அவங்களை தடுத்துட்டாரு. “குறைவான உடைகளோட வந்தவங்களை உள்ள விட்டுட்டு, இந்திய உடையணிஞ்ச எங்களை தடுக்குறாங்க”ன்னு அந்த தம்பதி குற்றம்சாட்டியிருக்காங்க.
“இது இந்திய கலாச்சாரத்தையும், ஒரு பெண்ணையும் அவமதிக்குறது”ன்னு வீடியோவுல பேசுறவர் கோபமா சொல்றாரு. இன்னொரு நபர், “இப்படி இந்திய உடையை தடுக்குற உணவகம் இங்க இயங்குறதுக்கு உரிமையே இல்லை, உடனே மூடணும்”ன்னு கத்துறாரு.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி.. பங்களாதேஷி 5 பேர் கைது..!!

இந்த வீடியோ X-ல வைரலானதும், டெல்லி சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் கபில் மிஷ்ரா உடனே ரியாக்ட் பண்ணாரு. “டெல்லியில இது ஏத்துக்க முடியாது. இந்திய உடையை தடுக்குறது அநியாயம். முதல்வர் ரேகா குப்தா இதை சீரியஸா எடுத்துக்கிட்டு, உடனடி விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காங்க”ன்னு X-ல பதிவு போட்டாரு. மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி அதிகாரியும் உணவக முதலாளி நீரஜ் அகர்வாலோட பேசியிருக்காங்க.
இதையடுத்து, உணவகம் தன்னோட உடை கட்டுப்பாட்டை திரும்பப் பெறுதுன்னு அறிவிச்சிருக்கு. “இனி எந்த உடையணிஞ்சாலும் எல்லாரையும் வரவேற்போம். ரக்ஷாபந்தனுக்கு இந்திய உடையணிஞ்சு வர்ற பெண்களுக்கு 10% டிஸ்கவுன்ட்டும், இலவச டெசர்ட்டும் தருவோம்”னு உணவக மேலாளர் நரேந்தர் சோலங்கி ஒரு வீடியோவுல சொல்லியிருக்காரு.
ஆனா, உணவக முதலாளி நீரஜ், “எங்களுக்கு இந்திய உடை மேல எந்த தடையும் இல்லை. அந்த தம்பதி டேபிள் புக் பண்ணல, அதான் உள்ள விடல”ன்னு IANS-க்கு சொல்லியிருக்காரு. இது உண்மையா இல்லையான்னு விசாரணை முடிவு சொல்லும்னு கபில் மிஷ்ரா தெரிவிச்சிருக்காரு.
சோஷியல் மீடியாவுல இந்த சம்பவம் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கு. “இந்தியாவுல இந்திய உடையை தடுக்குறது எப்படி? இது கலாச்சார அவமரியாதை”ன்னு ஒரு பக்கம் கோபம். “அதே சமயம், தனியார் உணவகத்துக்கு தன்னோட உடை விதிகளை வச்சுக்க உரிமை இருக்கு”ன்னு இன்னொரு பக்கம் வாதம்.
ஒரு X பயனர், “இந்த உணவகத்துக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுங்க, பார்க்கலாம் எப்படி மாறுதுங்க”னு எழுதியிருக்காரு. 2020-ல சவுத் டெல்லி மால்ல ஒரு பெண்ணை சேலை அணிஞ்சதால தடுத்த சம்பவம் மாதிரி இதுவும் பேசப்படுது
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!