இந்தியாவில் உள்ள யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களை வளர்ப்பதில் யூடியூப் உறுதிபூண்டுள்ளது. இந்திய யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோக்களி உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் யூடியூப் 850 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக யூடியூப் சிஇஓ நீல் மோகன் அறிவித்துள்ளார்.
யூடியூப் வருமானம்:
இந்தியாவில் சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் வீடியோக்களின் எண்ணிக்கை மற்றும் ரீச் புதிய உச்சம் தொட்டு வருகிறது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கன்டெண்ட்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரு தொலைதூர குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு எளிய பெண் கூட ரீல்கள் போடும் அளவிற்கு முன்னேறி வருகிறது. இந்தியர்கள் யூடியூப் மூலமாக மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சி... “கோலமாவு கோகிலா” மேயர் பிரியாவால் கொந்தளிக்கும் மக்கள்..!

மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் இன்று தொடங்கிய WAVES உச்சி மாநாட்டில் பங்கேற்ற யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், இந்தியாவின் படைப்பாளி பொருளாதாரம் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பது குறித்துப் பேசினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு யூடியூப் ரூ.21,000 கோடியை வழங்கியுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு 100 மில்லியனுக்கும் அதிகமான இந்திய யூடியூப் சேனல்கள் வீடியோக்களை பதிவேற்றியுள்ளன. ஒரு வருடத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்திய யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை 11,000 லிருந்து 15,000 ஆக அதிகரித்துள்ளதாக யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் தெரிவித்தார்.
டாப்பில் பிரதமர் மோடி:
உலகளவில் யூடியூப் சேனலைக் கொண்ட மிகவும் பிரபலமான அரசுத் தலைவர் நரேந்திர மோடி ஆவார். நரேந்திர மோடியின் யூடியூப் சேனலை 2.5 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். உலகளவில் யூடியூப்பில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட அரசுத் தலைவர் நரேந்திர மோடி என்று நீல் மோகன் கூறினார்.

இந்தியாவில் உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய உள்ளூர் திறமையாளர்களை வளர்ப்பதில் YouTube உறுதிபூண்டுள்ளது. இந்திய உள்ளடக்க படைப்பாளர்களின் வீடியோக்களை உலகளவில் விரிவுபடுத்தவும், அவர்களின் அணுகலை அதிகரிக்கவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் யூடியூப் 850 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா-இஸ்ரேலுக்கு குறி..! லஷ்கர்-இ-தொய்பா தலைவன் மிரட்டல்..! ஆப்பு வைத்து கொள்ளும் பாக்.,!