• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது! 275 இந்தியர்கள் உள்பட 3,916 பேர் மாயம்! 7-வது நாளாக தேடுதல் வேட்டை!

    பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்புகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 01 Sep 2026 15:22:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood Death Toll Crosses 1000 275 Indians Among Missing Persons

    காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. பேரழிவு ஏற்பட்டு ஒரு வாரம் நெருங்கியுள்ள நிலையில், 275 இந்தியர்கள் உள்பட 3,916-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் செவ்வாய்க்கிழமை 7-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து லெண்டே நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் போடே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதால், ஆற்றின் கரையோரங்களில் இருந்த கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    பல அடி உயரத்துக்கு சகதியுடன் பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்புகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பின்னர் திரிசூலி மற்றும் நாராயணி உள்ளிட்ட ஆறுகளிலும் கலந்ததால் பாதிப்பு பல பகுதிகளுக்கு விரிவடைந்தது. குறிப்பாக ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோர்கா மற்றும் தனாஹு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செவ்வாய்க்கிழமை தகவலின்படி, நேபாளத்தில் 987 பேரும், திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 1,003 ஆக உயர்ந்துள்ளது.

    FloodAlert

    மீட்கப்பட்ட சடலங்களில் இதுவரை 51 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 726 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சடலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே அடையாளம் காண முடியாத சடலங்களை நேபாள அரசு உரிய நடைமுறைகளின்படி அடக்கம் செய்து வருகிறது.

    நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் கைலாஷ் யாத்திரை உள்ளிட்ட பயணங்களுக்காக சென்றிருந்த 30 நாடுகளைச் சேர்ந்த 583 பேரின் நிலையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 275 இந்தியக் குடிமக்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர்.

    பெருவெள்ளம் ஏற்பட்டு ஏழு நாட்கள் கடந்துள்ள நிலையில், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் காரணமாக சில பகுதிகளை சென்றடைவதே சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமா என்பது மீட்புப் பணிகள் முழுமையடைந்த பிறகே தெரியவரும்.

    இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share