திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிர், இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி, வருகிற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!
டிசம்பர் மூன்றாம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை 6:00 மணி அளவில் 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக வடக்கு மண்டல ஐ ஜி அஸ்ரா கர்க் தலைமையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட 1060 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் குடிதண்ணீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து 4764 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக 520 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி தென்னக ரயில்வே சார்பில் ஏற்கனவே 14 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் 7 இடங்களிலும், கிரிவலப் பாதை மற்றும் நகர் முழுவதும் 90 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆப்பு வச்சிட்டியே சிவாஜி..." - பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்... உளறிக் கொட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்...!