தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, பா.ஜ.க. மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதல் மாநாடு இன்று திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதற்காக வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில், தச்சநல்லூர் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.
அமித் ஷாவின் வருகைக்காக முதலில் வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் (ஹெலிபேட்) தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூன்று ஹெலிகாப்டர்கள் வருவதால் அங்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால், திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ் மைதானம் மற்றும் ஜான்ஸ் பள்ளி மைதானம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இறுதியாக, ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு, பணிகள் முடிவடைந்துள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஏற்கனவே வந்து, இறங்குதளத்தை சோதனை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துவிட்டனர்.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கருக்கு என்ன ஆச்சு? அடைச்சு வச்சிருக்காங்களா? பத்திரமா இருக்காரா? அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்!!
அமித் ஷாவின் பயணத் திட்டம் இப்படி இருக்கிறது: இன்று மதியம் 2 மணிக்கு கேரளாவின் கொச்சி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்படுகிறார். மதியம் 2:50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ஜான்ஸ் பள்ளி வளாகத்துக்கு மதியம் 3:10 மணிக்கு வருகிறார்.
மாநாட்டில் பங்கேற்று, பா.ஜ.க. தொண்டர்களையும், பூத் கமிட்டி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தி, தேர்தல் வியூகங்கள் குறித்து பேசுகிறார். மாநாடு முடிந்ததும், மாலை 5:10 மணிக்கு ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
இந்த மாநாடு தமிழக பா.ஜ.க.வுக்கு முக்கியமானது. தென் மாவட்டங்களில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். அதேநேரம், அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு எப்படி நடக்கப் போகுது, தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னைக்கு மாலைக்குள்ள தெரிஞ்சுடும்!
இதையும் படிங்க: அடுத்த துணை ஜனாதிபதி யார்? வேட்பாளர் தேர்வில் மோடி மும்முரம்!! பாஜ மூத்த தலைவருக்கு பதவி!!