பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தற்போது 86 வயதாகிறது. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ராமதாஸுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி வந்து இருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேற்று மாலை ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மருத்துவர் ராமதாஸுக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அந்த ஆஞ்சியோகிராமில், இருதயத்துக்கு செல்கின்ற இரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவும் இல்லை. ராமதாஸுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ராமதாஸ் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து அவர்கள் கொடுக்கின்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அமைச்சருக்கு ஆஸ்கர் குடுங்கப்பா... விளாசிய அன்புமணி ராமதாஸ்...!
மற்றபடி பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிருக்கின்றார்கள். ராமதாஸ் ஐசியூவில் இருக்கிறார், அதனால் அவரை பார்க்க முடியவில்லை. 6 மணி நேரத்திற்கு பிறகு ஐசியூவில் இருந்து ரூமிற்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுக்கு பிறகு ரூமக்கு வந்துருவாரு. நான் கார்டியாலஜிஸ்ட் உடன் பேசினேன், இன்னும் இரண்டு நாட்கள் ராமதாஸ் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். எப்போதும் போல் நார்மலாக உட்காரலாம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!