தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் முதல்முறையாக இன்று (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
விஜயமங்கலம் அருகே திறந்தவெளியில் நடைபெறும் இந்தப் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ள நிலையில், ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு விஜய் இதுவரை கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் - செங்கோட்டையன் மாஸ் காம்போ! ஈரோட்டில் டிச.,16ல் சுற்றுப்பயணம்! தகர்க்கப்படும் அதிமுக கோட்டை!!
“ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?”, “இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ” (What bro it's very wrong bro) உள்ளிட்ட கேள்விகளும் கண்டனங்களும் அடங்கிய போஸ்டர்கள் நகரின் பல இடங்களில் தென்படுகின்றன.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் விஜயின் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். இதனால் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வரும் விஜயை வரவேற்க தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 35,000 பேர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தில் த.வெ.க.வின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், எதிர்ப்பு போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: விஜய் வைத்த செக்மேட்! செங்கோட்டையனுக்கு முதல் அசைன்மெண்ட்!! எடப்பாடியை நடுங்க வைக்கும் மாஸ்டர் பிளான்!