வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முடிச்சு விட்டாய்ங்க.. அதிமுகவை சீரழிக்கவே பாஜகவோடு கூட்டணி..! Ex எம்.பி அன்வர் ராஜா குற்றச்சாட்டு..!

அதிமுகவை சீரழிக்கவே பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா குற்றம் சாட்டினார்.

அன்வர் ராஜா, தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்வர் ராஜா, இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் எதிர்காலம் குறித்து தனது கருத்தை பகிரங்கமாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. அதிமுகவே தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும், அதற்கு எடப்பாடி பழனிசாமியே தலைவராக இருப்பார், என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து சந்திக்க உள்ள சூழலில் இவரது பேச்சு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் திமுகவின் இணைய உள்ளதாக வெளியான தகவலை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, அவர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் நெகட்டிவ் சக்தி, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்… ஆரோக்கியமாக விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை என்றும் மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டி அளித்த அமித் ஷா, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இபிஎஸ்- ஆல் கூற முடியவில்லை என்றும் அன்வர் ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிச்சயம் ஆட்சி மாறும்.. காட்சிகளும் மாறும்.. நயினார் நாகேந்திரன் உறுதி..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी