சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார். அப்போது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு சட்டம் வழங்க முக்கியம் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் பெண்கள், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள் என்றும் தொழில்கள் முறையாக நடைபெறும் எனவும் தெரிவித்தார். சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை என்று தெரிவித்த அவர், குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு சமம் என்பதை தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாடு என்றார்.
யாரிடமும் சார்பின்றி நடுநிலைத் தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார் என்றும் எதிர்க்கட்சியினர் உள்நோக்கத்துடன் கூறி கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தை மதித்தால் காவல்துறை உற்ற நண்பன் என்றும் குற்ற செயலில் ஈடுபடுவோருக்கு காவல்துறை எதிரி என்றும் கூறினார்.

ஒரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதை பொருள் பயன்பாடு இருக்கலாம் என்றும் தெரிவித்த அவர், அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல என்றும் குறிப்பிட்டார். காவல்துறை நடவடிக்கைகளில் எந்த தலையிடும் இருக்கக் கூடாது என்றும் குற்றம் நடக்கும் முன்னாடி தடுப்பது காவல்துறையின் பணி கூறியுள்ளார். மக்களுடன் காவல்துறை நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் சமூக காரணிகளும் குற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேரவையில் அரசியல் புயல்..! முதல்வர் விஜய் பதிலுரை... கேள்வி நேரம் ரத்து..!!
ஒரு மாணவன் உயிரிழப்பு என்பது வேதனையான சம்பவம் என்றும் சட்டம் தனது கடமையை சமரசம் இன்றி செய்யும் எனும் தெரிவித்தார். அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்க வேண்டும் என்றும் தற்காலத்தில் சைபர் குற்றங்கள் சவாலாக மாறி உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ் குமார் கொலை சம்பவத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். யார் மீது படி போடலாம் என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஒரே எண்ணிக்கையில் கொலைகள்..! வெறும் 100 நாளில் எப்படி சரி செய்ய முடியும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆதவ்..!!