ஆடிட்டர் வீட்டில் 40 சவரன் நகை, 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை .
ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்..
கணபதி நகரை சேர்ந்த ஆடிட்டர் துரைசாமி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், இவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு சுப்புலட்சுமி தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மற்றொரு அறையில் பீரோவை உடைத்து அதிலிருந்து 40 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!
அதிகாலையில் சுப்புலட்சுமி எழுத்து பார்த்த போது வீட்டில் கொள்ளை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே வீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு கொள்ளையர்கள் பீரோவை உடைத்து 150 சவரன் நகைகளை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதே வீட்டில் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!