பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பீகாரில் 'வாக்காளர் உரிமை யாத்திரை' மேற்கொள்கின்றனர். இன்று ராகுல் காந்தியின் யாத்திரை ஆனது தர்பங்காவிலிருந்து முசாபர்பூரை அடைந்ததுள்ளது.
பயங்கரவாதத்தை விட ஆபத்து:
முசாபர்பூர் பேரணியில் பேசிய ஸ்டாலின், ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க கைகோர்த்துள்ளனர் என்றும், பீகார் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும் கூறினார். பாஜக தேர்தல் ஆணையத்தை ஒரு கைப்பாவையாக மாற்றியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என்று திமுக தலைவர் கூறினார்.
இதையும் படிங்க: தனி விமானத்தில் பீகார் பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம்...!
பாஜக தேர்தலை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது:
பாஜக தேர்தலை ஒரு 'கேலிக்கூத்தாக' ஆக்கியதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார், மேலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதால் மக்கள் அதை அதிகாரத்திலிருந்து அகற்றுவார்கள் என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தை பாஜக தனது 'கைப்பாவையாக' ஆக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், "ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியுள்ளார், ஆனால் தேர்தல் ஆணையம் அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆணையம் அவரை ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னது... ராகுல் காந்தி பயப்பட மாட்டார்" என்றார்.
இதையும் படிங்க: ச்ச்சீ... இப்படியா நடந்துக்கிறது? போதை தலைக்கேறி ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்... வைரலாகும் வீடியோ