2026ம் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகளில் திமுக முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தொடங்கி பூத் ஏஜெண்டுகளை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது வரை தேர்தல் அடித்தளத்தை திமுக ஸ்ட்ராங்காக்கி வருகிறது. SIR பணிகளில் கூட அதிமுக பூத்து ஏஜெண்டுகளை விட திமுக பூத் ஏஜெண்டுகள் தீவிரமாக பணியாற்றி வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் மாற்று கட்சியினரை திமுகவில் இணைக்கும் அசைன்மென்ட் மிக முக்கியமான ஒன்று. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திமுக சேர்க்கும்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் களத்தில் தீயாய் இறங்கி வேலை செய்து வரும் திமுக அமைச்சர்கள் மாவட்டம் தோறும் கொத்துக் கொத்தாக மற்ற கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைத்து வருகின்றனர். அதேபோல் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் முக்கிய புள்ளிகளுக்கு பொறுப்பு வழங்குவதிலும் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு... உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு...!
2021ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்.பி லட்சுமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.
அதேபோல தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜாவிற்கும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனுக்கும் திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டது.
தற்போது அதிமுக அமமுக வரிசையில் பாஜகவினர் திமுகவில் இணைய ஆரம்பித்துள்ளனர். திருமங்கலம் அருகேபாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்ட செயலாளர் உட்பட 50க்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் , மாவட்ட பொருளாதார பிரிவின் பாஜக மாவட்ட செயலாளர்ராஜசேகர் மற்றும் விளையாட்டு துறை மாவட்ட செயலாளர் ராஜசேகர் உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: விறுவிறு SIR… வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் பிரச்சனை… அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை…!