காதல் விவகாரத்தில் இளைஞரை மிரட்டி கட்டாய கல்யாணம் செய்து வைத்த பாஜக பிரமுகர். கட்டாய கல்யாணம் செய்து வைத்து புகைப்படம் எடுத்து இரண்டு லட்சம் மிரட்டி வாங்கியதால், கைது செய்து சிறையில் அடைத்து போலீசார் நடவடிக்கை
பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத்.இவர் பிஜேபியைச் சேர்ந்த பிரமுகர் என பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது புகைப்படத்துடன் அடையாள அட்டையை பதிவு செய்துள்ளார்.தற்போது அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் திவித் (19) இவர் ஆனைமலையை சேர்ந்த 18 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதுடன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும், தொடர்ந்து அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருடு போன மரகத முருகன்..! அவ்ளோ மெத்தனம்..! மீட்டுக் கொண்டு வர நயினார் வலியுறுத்தல்..!!
மேலும் இது குறித்து புகார் அளிக்காமல் இருப்பதற்காக திவித்திடமிருந்து ரூபாய் 2 லட்சம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது நண்பர் ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து கடந்த 31ஆம் தேதி திவித்தை ஒரு வீட்டில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக திவித் அளித்த புகாரின் அடிப்படையில் கோமங்கலம் காவல் நிலைய போலீசார் ஆட் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண் பிரசாதை நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!