• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டப்படி ஆட்சி செய்கிறீர்களா..? உங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்கிறீர்களா..? மத்திய அரசை சாடிய மு.க.ஸ்டாலின்..!

    இதுதான் கூட்டாட்சியா? சட்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? அல்லது உங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்கிறீர்களா?
    Author By Thiraviaraj Sat, 08 Feb 2025 19:29:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    can-a-father-say-that-he-will-give-a-loan-to-his-child

    அப்பா தன் பிள்ளையோட படிப்புக்கு, உடைக்கு, உணவுக்கு பணம் தராமல் கடன் தருகிறேன் என்று சொல்ல முடியுமா? அப்படி கொடுத்தால் அதற்கு பெயர் குடும்பமா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடினார்.

    மத்திய அரசுக்கு எதிராக  கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. அப்போது, நிதி ஒதுக்காததற்கு கண்டனம் தெரிவித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ''12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்திய நாட்டினுடைய மக்கள் தொகை எவ்வளவு 140 கோடி. அதில் 2 விழுக்காட்டுக்கு குறைவான மக்களுக்கு தான் சலுகையை தவிர, வேறு இல்லை.

    இது பெரிய சாதனையாக காட்டுகிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கான ஒன்றிய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு பீகார், பீகார்.. பிஹார் என்று ஆறு முறை சொல்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். என்ன காரணம் ஏனென்றால் அங்கு தான் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. கடந்த முறை நிதி அறிக்கை என்னவாயிற்று? ஆந்திரா என்று அறிவித்தார்கள். அங்கே சட்டமன்றத் தேர்தல் வந்ததால் அப்படி சொன்னார்கள். இப்போது பீகாரில் தேர்தல் வரப்போகிறது என்பதால் பீகார் பீகார் என்று சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் காட்டும் திடீர் பாசம்... அன்புமணி ராமதாஸ் சுட்டும் பகீர் வேஷம்..!வன்னியர் வாக்குகள் யாருக்கு..?

    BJP

    பீகாருக்கும், ஆந்திராவுக்கும் திட்டங்களை ஒதுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கான புதிய சிறப்பு திட்டம் உண்டா? இல்லை. தமிழ் நாட்டுக்கான புதிய ரயில்வே திட்டம் உண்டா? இல்லை. ரயில்வே திட்டங்களுக்கான நிதியாவது அதிகப்படுத்தி இருக்கிறார்களா? இல்லை. சென்னை இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி உண்டா? இல்லை. பெஞ்சால் புயலுக்கு இழப்பீடு உண்டா? கிடையாது.நிக்ஜாம் புயலுக்கு இழப்பீடு உண்டா? அதுவும் கிடையாது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உண்டா? கிடையவே கிடையாது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி இருக்கிறதா? இல்லை. குடிநீர் திட்டத்திற்கு இல்லை... வீடு கட்டும் திட்டத்திற்கு இல்லை... எதை எடுத்தாலும் இல்லை.. இல்லை.. இல்லைதான்.

    இதற்கு பெயர் பட்ஜெட்டா? மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே..? தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்குவது பெருமையா? யோசித்துப் பாருங்கள். உங்களுடைய மனசாட்சிக்கு இதை விட்டு விடுகிறேன். மாநிலங்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு கடன் கொடுக்கிறது. அதுவும் வட்டி இல்லாத கடனாம். வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக்கடையா? அப்பா தன் பிள்ளையோட படிப்புக்கு, உடைக்கு, உணவுக்கு பணம் தராமல் கடன் தருகிறேன் என்று சொல்ல முடியுமா? அப்படி கொடுத்தால் அதற்கு பெயர் குடும்பமா?

    BJP

    மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்கிற மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி தராமல் கடன் தருகிறேன் என்று சொல்வதற்கு பெயர் ஆட்சியா ? இதுதான் கூட்டாட்சியா? சட்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? அல்லது உங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்கிறீர்களா? இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? தமிழ்நாடு என்றால் பாஜகவுக்கு பிடிக்கவில்லையா? பாஜகவுக்கு வாக்களிக்காத மக்கள் இருக்கிற மாநிலம் என்று நிதி கொடுக்க மறுக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசுக்கு நான் சொல்வதெல்லாம் நீங்கள் நிதியை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வேண்டுமானால் வஞ்சிப்பவர்களாக இருக்கலாம். நாங்கள் வாழ வைப்பவர்கள்'' என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

    மேலும் படிங்க
    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

    அரசியல்
    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா..!! இதுவரை அமையாத கூட்டணி... அடுத்த படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    ‘தினமும் 10 முதல் 15 தடவை I Love You சொல்வா’..!! ராஷ்மிகா குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா.. காதல் வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்..!

    சினிமா
    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

    தமிழ்நாடு
    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து   துடிதுடித்து பலி...!

    விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    உலகம்
    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    கேரளா போறீங்களா?மீண்டும் கனமழை எச்சரிக்கை! 6 மாவட்டங்களுக்கு Yellow Alert! இரவு பயணத்துக்கு தடை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share