• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING சென்னையை அதிர விட்ட துப்பாக்கி சத்தம்... கொலை வழக்கில் ரவுடி சுட்டுபிடிப்பு...! 

    சென்னை அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 27 Jun 2026 08:37:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai rowdy encounter

    சென்னை அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை நொளம்பூரில் முன்பகை காரணமாக சஞ்சய் என்பவரை வீடு புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதில் முக்கிய குற்றவாளியான 'ரூபேஷ்' என்பவரைத் தப்பியோட முயன்றபோது, நொளம்பூர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கொலையில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கைது செய்யப்பட்டனர். 

    சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சரத்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், நேற்று இரவு முருகதாஸ், அவரது மனைவி மற்றும் இரு மகன்களும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 11 மணி அளவில் திடீரென எட்டு பேர் கொண்ட ரவுடி கும்பல் வீட்டுக்குள் புகுந்து, முருகதாஸ், சஞ்சய் மற்றும் சரத்குமார் ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

    மூவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த செல்வி, தனது கணவர் மற்றும் இரு மகன்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூவரும் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகதாஸ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரவாயலைச் சேர்ந்த ரவுடி கார்த்திக்கின் சகோதரர் உதயாவை சஞ்சய் தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

    மேலும், சம்பவத்துக்கு முந்தைய இரவு சஞ்சய் தண்ணீர் கேன் எடுத்து வரும்போது, கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சஞ்சய் வீட்டுக்குச் சென்றதும், அவரை பின்தொடர்ந்து வந்த கார்த்திக் தலைமையிலான எட்டு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து சஞ்சய் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரூபேஷ் என்பவர், மதுரவாயல் பகுதியில் 'சி' வகை ரவுடியாக செயல்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூபேஷை கைது செய்ய போலீசார் சென்றபோது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் அவரது கால்முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரூபேஷ் மட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    சினிமா
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு
    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share