தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் உள்ளிட்டவை நிறைவடைந்த நிலையில் அனைத்து கட்சி இனரும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் 2.0 திராவிட மாடலை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய திமுகவினர் கடுமையாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் திராவிட மாடர் ஆட்சி அமையும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், திமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்பதால் ஏராளமான கட்சிகள் இணைந்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான இல்லத்தரசி திட்டமானது இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மக்கள் நலன் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டார். திராவிட மாடல அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை வளர்ச்சி மாநிலமாக மாற்றி இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகள் கூட்டாட்சி தத்துவத்தில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!
தமிழ்நாடு என்றும் தலைகுனையாது எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவை பயன்படுத்தி பின் வாசல் வழியாக தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அடிக்கும் இடையிலான இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!