தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற அமோக வெற்றிக்குப் பிறகு, கட்சித் தலைமை தனது எம்எல்ஏக்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டது. இது தவெகவின் அடிப்படை அரசியல் நெறியாகவும், புதிய அரசியல் கலாச்சாரத்தை வலியுறுத்தும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என தலைமை வலியுறுத்தியது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தானே முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுவாக நன்றி தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, “தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு” என்று தொடங்கி, மக்களின் ஆதரவால் மாற்றத்துக்கான வெற்றி சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.

இந்த வெற்றி தவெகவின் மட்டுமல்ல, மக்களாட்சியின் வெற்றி என்றும், பண பலத்தை மீறிய மக்கள் சக்தியின் வெற்றி என்றும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும் நேரடியாக மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தினர் நன்றி தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் செல்கிறார்.
இதையும் படிங்க: "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!
திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தமைக்கு நன்றி கூர செல்கிறார். இதே போல தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து எம்எல்ஏக்களும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!